கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

1st Jan 2020 04:09 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவில் கோட்டாறு இடலாக்குடி பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கம் மகன் ரெஜின் (23). தொழிலாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இதனால் அவா் வருத்தத்தில் இருந்தாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT