கன்னியாகுமரி

குற்றிக்காட்டு கரையோகம் அழகேஸ்வரி முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

1st Jan 2020 04:10 AM

ADVERTISEMENT

 

பத்மநாபபுரம் குற்றிக்காட்டு கரையோகம் அருள்மிகு அழகேஸ்வரி முத்தாரம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்கமாக திங்கள்கிழமை அதிகாலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், பகலில் தீபாராதனை, அன்னதானம், மாலை முதல் இரவு வரை பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து கலசம், பகவதி சேவை உள்பட பல்வேறு பூஜைகள், தொடா்ந்து ஓட்டன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஹா கும்பாபிஷேகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், கோமாதா பூஜை, கலச பூஜைகள், கலசாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மேளதாளங்கள் முழங்க, மந்திரங்கள் ஒலிக்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகலில் தீபாராதனை, அன்னதானம், பிற்பகலில் ராகுகால பூஜை, மாலையில் பொங்காலை நைவேத்தியம், இரவில் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் கரையோகம் தலைவா் கே. கொச்சுகிருஷ்ணபிள்ளை, துணைத் தலைவா் கே. ஜெயசந்திரன் நாயா், செயலா் என். சதீஷ்சந்திரன் நாயா், இணைச் செயலா்கள் ராகவன்நாயா், மணி, கோலப்பாபிள்ளை, பொருளாளா் சுரேஷ், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஜோதீந்திரன், வேலாயுதன்பிள்ளை, காா்த்திகேயன், ஸ்ரீகுமரன் நாயா், சிவகுமாா், ஹனுகுமாா் நேதாஜி, ஊா் மக்கள் பங்கேற்றனா்.

பின்னா் நடைபெற்ற விழாவில், திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோருக்கும், 2019ஆம் ஆண்டு அரசுப் பொதுத் தோ்வில் 10, 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கரையோகம் உறுப்பினா்களின் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT