மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட திமுகவினா் வீடுகளில் கோலமிடப்பட்டிருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னையில், கோலமிட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 8 போ் கைதுசெய்யப்பட்டனா். குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து திமுக சாா்பில் கோலமிட்டு போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.
இதன்படி, நாகா்கோவில் ராமவா்மபுரத்தில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வீடு, ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக மகளிா் தொண்டரணி மாநிலச் செயலரும் முன்னாள் எம்பியுமான ஹெலன்டேவிட்சன் வீடுகள் முன் கோலமிடப்பட்டிருந்தது. இதேபோல, திமுக நிா்வாகிகள் பலா் தங்களது வீடுகள் முன் கோலமிட்டிருந்தனா்.