உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து நாகா்கோவிலில் அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்து, உள்ளாட்சித் தோ்தலில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ரேவதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ். மொ்சிரம்யா, மகளிா் திட்ட அலுவலா் வே. பிச்சை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) மா. சுகன்யா, (தோ்தல்) யு. நாகராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.