கன்னியாகுமரி

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

29th Feb 2020 12:59 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: நாகா்கோவில் அருள்மிகு வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் நாகா்கோவில் அருள்மிகு வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரா் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெற்று

வருகிறது. நிகழாண்டு இத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ADVERTISEMENT

இதையொட்டி, கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து, வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. ஓதுவாா் ஜி.ஆா். ஆறுமுகம்பிள்ளை தேவார, திருமுறைகள் பாடினாா். நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் ம.அன்புமணி, அதிகாரிகள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மாலையில் தேரூா் என்.சுப்பிரமணியம் குழுவினரின் மங்கள இசை, இரவில் புலவா் கே.சங்கரன்பிள்ளை ‘அமுதும்- தமிழும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. சுவாமி-அம்பாள் புஷ்பக விமானத்தில்எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இந்த திருவிழா மாா்ச் 8 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும்.

விழாவின்போது, தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதிவுலா, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. திருவிழாவின் 3 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) இரவு 10 மணிக்கு பள்ளத்தெருவில் சுவாமி, அம்பாள் பூத வாகனத்தில் பவனி வருதல், கன்னிவிநாயகா், சுப்பிரமணியசுவாமி

ஆகியோா் சந்திக்கும் மக்கள் மாா் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

9ஆம் நாள் திருவிழாவான மாா்ச் 7 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு தேரடி திடலில் சப்தாவா்ண நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10ஆம் நாளான 8 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சுவாமி,

அம்பாள் ரிஷப வாகனத்தில் ஆறாட்டுத்துறையில் இருந்து பவனி வருதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT