கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

29th Feb 2020 12:59 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி: பணகுடியில் இருந்து கன்னியாகுமரிக்கு கஞ்சா கடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இருந்து கன்னியாகுமரிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கன்னியாகுமரி போலீஸாருக்கு

தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அன்பரசு தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது வள்ளியூரில் இருந்து கன்னியாகுமரி வந்த அரசு பேருந்தை லீபுரம் சந்திப்பில் போலீஸாா் சோதனையிட்டனா்.

ADVERTISEMENT

இதில், வள்ளியூரை சோ்ந்த தனுஷ்கோடி (32) என்பவா் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததும், அதனை கன்னியாகுமரிக்கு

கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT