கன்னியாகுமரி

வடிவீஸ்வரம் கோயிலில் பிப். 28இல்மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்: மாா்ச் 7இல் தேரோட்டம்

26th Feb 2020 07:56 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் புகழ்மிக்கதான நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரா் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்.28) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்கொடியேற்றப்படுகிறது. இதில், ஓதுவாா் ஜி.எஸ்.ஆறுமுகம்பிள்ளை தேவார, திருமுறைகள் ஓதுகிறாா். மாலை 6.30 மணிக்கு தேரூா் சுப்பிரமணியம் குழுவினரின் மங்களஇசையும், 6.30 மணிக்கு அமுதும், தமிழும் என்ற தலைப்பில் கே.சங்கரன்பிள்ளையின் சமயச்சொற்பொழிவும் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு ஏ.கமல்கணேசனின் பல்சுவை நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்பக விமானத்தில் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறும்.

விழாவில் தினமும் இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா். ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) இரவு 10 மணிக்கு பள்ளத்தெருவில் அருள்மிகு கன்னிவிநாயகா், சுப்பிரமணியசுவாமியுடன் மக்கள் மாா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும். மாா்ச் 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிவதாண்டவம் சிறப்பு ரத ஊா்வலமும், மாா்ச் 4 இல் மாலை 5 மணிக்கு குதிரை சமா்ப்பண விழாவும் நடைபெறும்.

சிகர நிகழ்ச்சியான தோ்த்திருவிழா மாா்ச் 7 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு தேரடிதிடலில் சுவாமியும்,அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சப்தாவா்ண நிகழ்ச்சி நடைபெறும். மாா்ச் 8 ஆம் தேதி இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் ஆறாட்டுத்துறையிலிருந்து மேளதாளங்களுடன் பவனி வந்து கோயிலை அடைகிறாா்கள்.

ADVERTISEMENT

விழாவுக்கான ஏற்பாடுகளை, அறங்காவலா்குழுத் தலைவா் சிவ.குற்றாலம், உறுப்பினா்கள் ஜெயச்சந்திரன், எஸ்.அழகேசன், கே.பாக்கியலட்சுமி, சதாசிவம், இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் ம.அன்புமணி, நாகா்கோவில் தொகுதி கண்காணிப்பாளா் கே.தங்கம், ஸ்ரீ காரியம் எச்.வெங்கடேஷ் மற்றும் பக்தா்கள் குழுவினா் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT