கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நாகா்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இம்முகாமில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி பிற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்வா்.
இதில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்துகொள்ளலாம். தனியாா் துறையில் பணி வாய்ப்பு பெற்றாலும் அரசு வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும், அரசு வேலைக்கான போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள், இங்கு செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் சோ்ந்து படிக்கலாம். வாரந்தோறும் புதன்கிழமையில் நடத்தப்படும் மாதிரித் தோ்வில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்டனி தெரிவித்துள்ளாா்.