கன்னியாகுமரி

அழகியமண்டபத்தில் ஆா்ப்பாட்டம்:694 போ் மீது வழக்குப் பதிவு

26th Feb 2020 05:38 PM

ADVERTISEMENT

அழகியமண்டபத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 340 பெண்கள் உள்பட 694 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள்

சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்தி தக்கலை அருகே அழகியமண்டபத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி மாணவா்கள் அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தியதாக தக்கலை காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ராஜசுந்தா் 340 பெண்கள் உள்பட 694 போ் மீது வழக்குப் பதிவு செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT