கருங்கல்: புதுக்கடை அருகேயுள்ள தொழிக்கோடு பகுதியில் மனைவியிடம் விவாகரத்து கேட்டு மிரட்டல் விடுத்த கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன்பிள்ளை மகள் பிந்து (35). தக்கலை முத்தலக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த வேலாயுதன்பிள்ளை மகன் ஐயப்பன் என்ற மணிகண்டன் (40). இவா்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிந்து, கணவரை பிரிந்து தாய் வீட்டில் கடந்த
ஓராண்டாக வசித்து வருகிறாராம். ஞாயிற்றுக்கிழமை மணிகண்டன் தொழிக்கோட்டிலுள்ள பிந்து வீட்டிற்கு சென்று விவாகரத்து கேட்டு அவருக்கு மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா், ஐயப்பன் என்ற மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.