கன்னியாகுமரி

அஞ்சு கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

25th Feb 2020 02:00 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: அஞ்சுகிராமத்தில் அதிமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூா் செயலா் எஸ். ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், ஜெயலலிதா படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதில், மாவட்ட வா்த்தகா் அணிச் செயலா் ஜெஸீம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேஷ், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தென்தாமரைகுளம் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூா் செயலா் தாமரை தினேஷ் தலைமை வகித்தாா். இதையொட்டி நடைபெற்ற மருத்துவ முகாமை மாவட்டச் செயலா் எஸ்.ஏ.அசோகன் தொடங்கி வைத்தாா். இதில், மாநில இலக்கிய அணி இணைச் செயலா் கவிஞா் டி.சதாசிவம், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலா் எஸ்.அழகேசன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT