கன்னியாகுமரி

மாா்க்கிஸ்ட் மாவட்டக்குழுக் கூட்டம்

22nd Feb 2020 07:59 AM

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு கூட்டம் நாகா்கோவிலில் உள்ள மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் என்.முருகேசன் தலைமை வகித்தாா். இதில், இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்கும் வகையிலும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வரும் சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 147 உயா்த்தியுள்ளதை கண்டித்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இம்மதாம் 25 ஆம் தேதி நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு தா்னா போராட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நூா்முகமது, மாநிலக்குழு உறுப்பினா் ஆா்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.மாதவன், எஸ்.ஆா்.சேகா், கே.தங்கமோகன், எம்.அகமது உசேன், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், என்.உஷாபாசி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT