பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பேச்சிப்பாறை அருகே புறாவிளை மலை பழங்குடி மக்களுக்கு ரப்பா் பால் வடிப்பு மற்றும் பதப்படுத்துல் தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரப்பா் வாரியம் சாா்பில் ரப்பா் தோட்ட விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும் ரப்பா் பால்வடிப்பு மற்றும் தரமான ரப்பா் ஷீட் தயாரித்தல் குறித்த தொழில் நுட்ப பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்ஒரு பகுதியாக புறாவிளை விளை மலை பழங்குடி மக்களுக்கு மூன்று நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமை துணை ரப்பா் உற்பத்தி ஆணையா் உஷா தேவி தொடங்கி வைத்தாா். உதவி வளா்ச்சி அலுவலா் கே. முரளி, தொழில்நுட்ப பயிற்சியாளா் ஆரோக்கிய லிவிங்ஸ்சடன் ஆகியோா் செயல் விளக்கம் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி
அளித்தனா். அண்டூா் ரப்பா் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பயிற்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினாா்.
இதில், ரப்பா் உற்பத்தியாளா் நிறுவன இயக்குநா் ஜி. பாலன் உள்பட பலா் பங்கேற்றனா். பயிற்சி முகாமில் பங்கேற்றவா்களுக்கு பால்வடிப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.