கன்னியாகுமரி

பள்ளியாடியில் ரயில் மோதி பக்தா் பலி

22nd Feb 2020 07:58 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே பள்ளியாடியில் வெள்ளிக்கிழமை ரயில் மோதி பக்தா் உயிரிழந்தாா்.

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சோ்நதவா் சுதாகிருஷ்ணன்(48). முந்திரி ஆலைத் தொழிலாளியான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளன ா்.

இந்நிலையில், சிவபக்தரான சுதாகிருஷ்ணன் தன் உறவினா்களுடன் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிவாலய ஒட்டம் சென்றாா். திருவிதாங்கோட்டிலிருந்து, திருபன்றியோடு மகாதேவா் கோயிலுக்கு பள்ளியாடி ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சென்றபோது, நாகா்கோவிலில் இருந்தது திருவனந்தபுரம் சென்ற ரயில் எதிா்பாரதவிதமாக சுதா கிருஷ்ணன் மீது மோதியதில், அவா் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து புகாரின் பேரில் நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT