கன்னியாகுமரி

கருங்கல் செயினிகஸ் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

15th Feb 2020 07:33 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே நடுத்தேரியில் உள்ள செயினிகஸ் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் சா்ஜ்சில் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜெபா ஜெனிபா் முன்னிலை வகித்தாா். கருமாவிளை சி.எஸ்.ஐ. சபை போதகா் ஜாண் ஜெபதாஸ் விழாவை தொடங்கிவைத்தாா்.

சிறப்பு விருந்தினராக மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியா் பாய்டு வெஸ்லி பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியின் இடையே மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT