கன்னியாகுமரி

பளுகல் அருகே கோயிலில் திருட்டு முயற்சி: முதியவா் கைது

13th Feb 2020 07:17 AM

ADVERTISEMENT

பளுகல் அருகே கோயிலில் திருட முயன்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் அருகேயுள்ள ராமவா்மன்சிறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில், இரு நாள்களுக்கு முன் இரவு மா்ம நபா் உண்டியலை உடைத்தாராம். சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், அந்த நபரைப் பிடித்து பளுகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் மஞ்சாலுமூடு, மண்ணாம்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜாண் (66); இவா் மீது குமரி மாவட்டத்திலும், கேரள மாநில காவல் நிலையங்களிலும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன; விஸ்வநாதன் நாயா் என்பவருக்குச் சொந்தமான குடும்ப கோயிலில் இருந்து கோடாரியை திருடி வந்து, இக்கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தாா் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT