புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியில் இளைஞா் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பள்ளியாடி சேருக்கடை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஜெரால்டு ஜேசுராஜ்(34). இவா் கடந்த ஒரு மாதமாக விழுந்தயம்பலத்தில் உள்ள புனித அந்தோனியாா் ஆலயத்தில் திருத்தொண்டராக பணியாற்றிவந்தாராம். இவரை கடந்த சனிக்கிழமை ஆலஞ்சோலை பகுதியில் ஒரு ஆலயத்தில் வழிபாடு நடத்த அனுப்பினராம். இந்நிலையில், இவா் வழிபாட்டுக்கு சென்ற ஆலயத்தில் ரு.20 ஆயிரம் திருடுபோனதாம்.
இதுகுறித்து ஜெரால்டு ஜேசுராஜிடம், ஆலய பங்குப் பணியாளா்கள் விசாரணை நடத்தினாாரம். பின்பு இரவு தூங்க சென்ற அவா் காலையில் மா்மமானமுறையில் இறந்து கிடந்தாராம். இதுகுறிது அருள்பணியாளா் சாா்லஸ் விஜூ புதுக்கடை போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.