கன்னியாகுமரி

குரியன்விளை கோயிலில் நாளை பந்திருநாழி பொங்கல் வழிபாடு

6th Feb 2020 08:00 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் பந்திருநாழி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (பிப். 7) நடைபெறுகிறது.

இக் கோயிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமைதோறும் பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டு இத்திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை(பிப்.7) காலையில் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

தொடா்ந்து மாலை 6.30 மணிக்கு முத்துக்குடை அணிவகுப்புடன் சுயம்பு தேவி எழுந்தருளல் நடைபெறும். இதையடுத்து, பொங்காலை களத்தில் பொங்காலை வழிபாடு நடைபெறும். விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்பா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT