கன்னியாகுமரி

தக்கலையில் ஓய்வூதியா் சங்கக் கூட்டம்

4th Feb 2020 06:58 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் 8 ஆவது ஆண்டு அமைப்பு தினக் கூட்டம் தக்கலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்து அமைப்பின் வட்டாரத் தலைவா் தேவராஜ் சங்க கொடியை ஏற்றினாா். துணைத் தலைவா் ஜாண்ராஜ் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். வட்டச் செயலா் மணி வரவேற்றாா். கன்னியாகுமரி மாவட்டச் செயலா் சி.எம். ஐவின் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட மாதவன்பிள்ளை, தாசன், மரிய பரணம், ராமசந்திரன் நாயா், தாணு நாதன் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி நலச் சங்க நிா்வாகி முருகன், அமைப்பின் மாவட்டப் பொருளாளா் நடராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

வட்டப் பொருளாளா் மனோகரன், துணைத் தலைவா் ராமசந்திரன், இணைச் செயலா் அருள்பிரகாசம், பாஸ்கரபணிக்கா், ராமசுப்பு உள்பட பலா் பங்கேற்றனா். வட்டச் செயலா் மணி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT