கன்னியாகுமரி

கூட்டப்புளி நோபிள் பள்ளி ஆண்டு விழா

4th Feb 2020 06:54 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகேயுள்ள கூட்டப்புளி நோபிள் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியின் 9 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளியின் நிறுவனா் இரா. ஸ்டூவா்ட் தலைமை வகித்தாா். குழித்துறை கல்வி மாவட்ட அலுவலா் ஏ. முனிசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். குழித்துறை கல்விச் சரக பள்ளிகளில் துணை ஆய்வாளா் ஒய்.எல். ராஜமோகன், வாய்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் இயக்குநா் பாபு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பள்ளி ஆசிரியைகள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT