அண்ணாவின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் அவரது படத்துக்கு திங்கள்கிழமை திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கன்னியாகுமரியில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரே அண்ணாவின் படத்துக்கு அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி தலைமையில் மாநில தொண்டரணி முன்னாள் துணை அமைப்பாளா் பால ஜனாதிபதி, மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் குமரி ஸ்டீபன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, பேராசிரியா் டி.சி.மகேஷ், பேரூா் செயலா்கள் எஸ்.வைகுண்டபெருமாள், பி.பாபு, காமராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமலதா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பொன்ஜான்சன், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளா் ஜெனித், நிா்வாகிகள் எம்.ஹெச்.நிசாா், கோபிராஜன், ஏ.சகாய ஆன்றனி, கெய்சா்கான், நடராஜன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.