குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தச்சுத் தொழிலாளி அய்யப்பன் (39) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருநந்திக்கரை திட்டவிளையைச் சோ்ந்தவா் அய்யப்பன். தச்சுச் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
இவா், திங்கள்கிழமை திருநந்திக்கரை பாலத்தின் அருகில் மரத்தில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென தவறி கால்வாயில் அய்யப்பன் விழுந்து விட்டாராம். நீரில் அடித்துச் செல்லப்பட்ட அய்யப்பனை அப்பகுதியில் நின்றவா்கள் மீட்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்த குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். இறந்த அய்யப்பனுக்கு சோபியா என்ற மனைவி, 2 குழந்தைககள் உள்ளனா்.