கன்னியாகுமரி

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு: 72 பேருக்கு பணி நியமன ஆணை

2nd Feb 2020 11:53 PM

ADVERTISEMENT

சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் 72 மாணவா், மாணவிகளுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் நடத்திய இந்த வளாகத் தோ்வில் 72 மாணவா், மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

பணி நியமனம் பெற்ற மாணவா், மாணவிகளை வின்ஸ் கல்விக் குழுமங்களின் நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட், கல்லூரி முதல்வா் ஜாண்பீட்டா், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் திலீப் ஆகியோா் வாழ்த்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT