பளுகல் அருகே செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பளுகல் அருகே மொட்டமூடு, புதுக்குளங்கரை பகுதியிலிருந்து செம்மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், விளவங்கோடு துணை வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அவ்வழியாக செம்மண் கடத்திச் சென்ற மினிலாரி ஓட்டுநா், அதிகாரிகளை கண்டதும் அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து செம்மண் கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டா் மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து பளுகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.