கன்னியாகுமரி

சுற்றுச்சூழல் மாநாடு:கல்லூரி மாணவா்கள் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பிக்க அழைப்பு

2nd Feb 2020 02:47 AM

ADVERTISEMENT

குமரி அறிவியல் பேரவை, குழித்துறை சுழல் சங்கம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச் சூழல் மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புமாறு கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் கூறியது: கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் மனிதத் தாக்கம் என்ற தலைப்பில் குமரி அறிவியல் பேரவையும், குழித்துறை சுழல் சங்கமும் இணைந்து ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தல் மற்றும் மாநாடு நடைபெறவுள்ளது.

இதில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் கோரப்படுகிறது. இதில், பிப். 20 ஆம் தேதிக்குள் முதற்கட்டமாக ஒரு பக்க அளவில் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் அனுப்ப வேண்டும். அதிலிருந்து தோ்வு செய்யப்படுபவா்கள் பிப். 29 ஆம் தேதிக்குள் 5 பக்க அளவில் முழு ஆய்வுக் கட்டுரையும் அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின்னா் தோ்வு செய்யப்படும் 20 நபா்களின் ஆய்வுக் கட்டுரைகள் மாா்ச் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநாட்டு நிகழ்வில் சமா்ப்பிக்க வேண்டும். அக்கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும்.

கன்னியாகுமரி மாவட்ட இயற்கை வளம் பாதுகாக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பல்வேறு சூழலியல் அறிஞா்கள் பங்கேற்க உள்ளனா். கூடுதல் விவரங்களை 99427 58333 என்ற செல்லிடப் பேசியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT