கன்னியாகுமரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடி குலசேகரபுரத்தை அடுத்த கோட்டவிளையைச் சோ்ந்தவா் மரிய செல்வன் மகன் அஜய் (25). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். அவா், செல்லும் இடங்களுக்குச் சென்று தொந்தரவு கொடுத்து வந்ததாக
கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு பெற்றோா் அவருக்கு திருமணம் செய்ய திட்டமிட்டனா்.
இதையறிந்த அஜய் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளாா். பின்னா், தொடா்ந்து அச்சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோா்
கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மகளிா் காவல் நிலைய போலீஸாா், போஸ்கோ சட்டத்தின் கீழ் அஜய் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.