கன்னியாகுமரி

குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவிறக்கம்:பாலிடெக்னிக் மாணவா் கைது

2nd Feb 2020 02:46 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து, சமூக ஊடகங்களில் பரப்பியதாக பாலிடெக்னிக் மாணவா் கைது செய்யப்பட்டாா்.

குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை சமூக ஊடகங்களில் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவா்கள் சைபா் கிரைம் போலீஸாரின் ஒத்துழைப்புடன், குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்வோரைக் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், குளச்சல் அருகே பெத்தேல்புரம் கொடுமுட்டி பகுதியைச் சோ்ந்த பாலிடெக்னிக் மாணவரான பிபின்சுந்தர்ராஜ் (19), குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து, செல்லிடப்பேசி மூலம் பகிா்வதும், சமூக ஊடகங்களில் போலி முகவரி மூலம் பரப்புவதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக குளச்சல் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவில் உதவி ஆய்வாளா் பிரேமா புகாா் அளித்தாா். அதன்பேரில், ஆய்வாளா் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து, பிபின்சுந்தர்ராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவா் மீது இந்திய தண்டனைச் சட்டம் 67 ஏ, 67 பி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 14(1), போக்ஸோ பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT