கன்னியாகுமரி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து திமுக கூட்டணி 17 இடங்களில் கையெழுத்து இயக்கம்

2nd Feb 2020 11:57 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து திமுக சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 இடங்களில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், குமரி கிழக்கு மாவட்டத்தில் 9 இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்டச் செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பொ்ணாா்டு, நாகா்கோவில் நகரச் செயலா் மகேஷ், அணி அமைப்பாளா்கள் எம்.ஜே.ராஜன், சிவராஜ், பசலியான், பெஞ்சமின், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசாமி, அந்தோணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், கொட்டாரம் சந்திப்பு, அனந்தநாடாா்குடி சந்திப்பு, ஈத்தாமொழி சந்திப்பு, மணவாளக்குறிச்சி, திங்கள்நகா், முளகுமூடு சந்திப்பு, குளச்சல் அண்ணாசிலை ஆகிய பகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதே போல் குமரி மேற்கு மாவட்டத்தில் மாா்த்தாண்டம், நித்திரவிளை, கருங்கல், மேல்புறம், குலசேகரம், குழித்துறை, அழகியமண்டபம், தக்கலை, ஆகிய 8 இடங்களிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT