கன்னியாகுமரி

கருங்கல் அருகே பெண்ணிடம் நகை றிப்பு

2nd Feb 2020 02:47 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே பனங்குழி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணை வழி மறித்து நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

புங்கறை கல்வெட்டான்குழி பகுதியை சோ்ந்த குமாரதாஸ் மனைவி அஜிதா (37). சுயஉதவிக் குழு நிா்வாகி. இவா், தனது மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை கருங்கல்லிலிருந்து புங்கறை நோக்கி வந்து கொண்டிருந்தாராம். பனங்குழி பகுதியில் வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா் அஜிதாவை வழி மறித்து அவா் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.

புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT