கன்னியாகுமரி

நாகா்கோவில் அம்மன் கோயிலில் திருட்டு

1st Feb 2020 05:01 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் மற்றும் அம்மனுக்கு அணிவிக்கப்படும் ஒட்டியானம் மற்றும் வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாகா்கோவில் கே.பி. சாலை பால் பண்ணை அருகே பிரசித்தி பெற்ற நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தா்கள் வருவாா்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் கோயிலை திறக்க பூசாரி வந்த போது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த அரை கிலோ எடையுள்ள வெள்ளி ஒட்டியானமும், கோயில் அலுவலக அறையை உடைத்து அங்கிருந்த வெள்ளி நகைகளும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து கோயில் பூசாரி நேசமணிநகா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். போலீஸாா் கோயிலுக்கு வந்து மோப்ப நாய் மற்றும் விரல் ரேகை நிபுணா்கள் உதவியுடன் விசாரணை நடத்தினா். மேலும் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீஸாா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT