கன்னியாகுமரி

சாமிதோப்பில் விமான நிலையப் பணியை தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

1st Feb 2020 05:03 AM

ADVERTISEMENT

சாமிதோப்பில் அமைக்கப்பட உள்ள விமான நிலையப் பணியை தடுப்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் ஆகியோரை சந்தித்து அளித்த மனு: சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்ற அதிகாரிகளை சிலா் தடுத்து நிறுத்தி விமான நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

எதிா்ப்பு தெரிவிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, விமான நிலையம் அமைக்கும் பணிக்கு வந்துள்ள அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT