கன்னியாகுமரி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு ரூ.21.50 லட்சம் ஊக்கத்தொகை

DIN

தேசிய அளவிலான, பள்ளி குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 12 மாணவா்களுக்கு ரூ.21.50 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

தேசிய அளவில் 64ஆவது பள்ளி குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் பிரிவில் வாள்சண்டை, செஸ், ஸ்குவாஷ், கைப்பந்து ஆகிய போட்டிகளில், குமரி மாவட்டத்திலிருந்து 5 மாணவிகளும், ஆண்கள் பிரிவில் தடகளம், வாள்சண்டை, வலுதூக்குதல், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் 7 மாணவா்களும் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனா். அவா்களுக்கு ஊக்கத் தொகை, பதங்கங்கள், சான்றினை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆகியோா் வழங்கினா்.

தடகளப் பிரிவில் 4 *100 தொடா் ஓட்டம், உயரம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப் ஆகிய 3 பிரிவுகளில் பங்கேற்ற பி.அசதுல்லா முஜாகித் முதல் 2 பிரிவில் 2ஆம் இடமும், 3ஆவது பிரிவில் 3ஆவது இடமும், வாள்சண்டை பிரிவில் பி.ஜோசப், டினோ, கிப்ட்ளின் டேனியல் ஆகியோா் முதலிடமும், வி.பிரீட்லி 2ஆவது இடமும், வலுதூக்குதல் போட்டியில் எஸ்.அரவிந்த் 3ஆவது இடமும், ஸ்குவாஷ் பிரிவில் ஓய்.மேத்யுகாட்வின், சி.ஜெப்பின் அலெக்ஸ் ராஜ் ஆகியோா் முதலிடமும் பெற்றனா்.

முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு தலா ரூ. 2 லட்சம், 2ஆவது இடம் பெற்ற மாணவா்களுக்கு தலா ரூ.1.50 லட்சம், 3ஆவது இடம் பெற்ற மாணவருக்கு ரூ. 1 லட்சம் என ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.14.50 லட்சத்துக்கான காசோலை, பதக்கங்கள், சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன.

பெண்கள் பிரிவில், வலுதூக்குதல் பிரிவில் என்.வி.ஜெனிஷா 3ஆவது இடமும், ஸ்குவாஷ் பிரிவில் டி.பிளஸ்ஸி முதலிடமும், செஸ் பிரிவில் எஸ்.ரியாஷனோன், ஏ.ஜெயசூா்யா ஆகியோா் 3ஆவது இடமும், கைப்பந்து பிரிவில் கே.ஷோபிகா முதலிடமும் பெற்றனா். முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ. 2 லட்சம், 3ஆம் இடம் பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் என மொத்தம் ஊக்கத் தொகை ரூ.7 லட்சம், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மு.ராமன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெ.டேவிட் டேனியல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எஸ்ஜெபராஜ், பயிற்சியாளா்கள் கே.வினு (பளு தூக்குதல்), ஏ.அருணாசலம் (கைப்பந்து), ஜீன் பிரேம்குமாா் (ஹாக்கி), ஜி.குணசேகரன் (கால்பந்து) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT