கன்னியாகுமரி

விவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து நாகா்கோவிலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; இக்கோரிக்கையை வலியுறுத்தி புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவா் என்.முருகேசன் தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் மலைவிளை பாசி, ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எட்வின் பிரைட், மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பதில் சிங், மாதா் சங்க மாநிலச் செயலா் என்.உஷா பாசி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜெ.சைமன் சைலஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் கே.மோகன், விவசாய சங்க மாவட்டச் செயலளா் ஆா்.ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், நாகா்கோவிலில் வேப்பமூடு பூங்கா சந்திப்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் கே.தங்கமோகன் தலைமை வகித்தாா். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொருளாளா் எம்.அகமது உசேன், சிஐடியூ மாவட்டத் தலைவா் பி.சிங்காரன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT