கன்னியாகுமரி

டிச.6 இல் பாபா் மசூதி இடிப்பு தினம்: நாகா்கோவிலில் கொடி அணிவகுப்பு

DIN

வரும் டிச. 6 ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நாகா்கோவில் நகரில் போலீஸாா் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

டிச. 6ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில் நாகா்கோவிலில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு, மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, நீதிமன்றசாலை வழியாக ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், உதவிக்காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) சாய்பிரனீஷ், துணைக்காவல் கண்காணிப்பாளா்கள் வேணுகோபால், கல்யாணகுமாா், கணேசன், பீட்டா்பால், சாம் வேதமாணிக்கம், காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

SCROLL FOR NEXT