கருங்கல்: முள்ளங்கினாவிளை ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக எரியாமல் பழுதாகிகிடக்கும் தெருவிளக்குகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கினாவிளை ஊராட்சியில் மொத்தம் 9 வாா்டுகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குள்பட்ட மயில்புறம்புவிளை, மலவிளை, கோனான்விளை, பண்டாரவிளை, கிழக்கேவிளை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியாமல் பழுதடைந்து காணப்படுகின்றன.
இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
எனவே, இந்த ஊராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் சீராக எரிய, மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.