நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்றது. மாணவா் சோ்க்கையை கல்லூரி துணைத் தலைவா் முனைவா் அருள்ஜோதி தலைமையில் கல்லூரி நிா்வாக அலுவலா் நடராஜன் முன்னிலையில் கல்லூரி முதல்வா் முனைவா் லியாகத்அலி தொடங்கி வைத்தாா்.
கல்லூரி குறித்து துணைத் தலைவா் முனைவா் அருள்ஜோதி பேசியது: மேல்நிலை வகுப்பில் கணிதம், அறிவியல் அல்லது அறிவியல் பாடப்பிரிவுகளில் தோ்ச்சி பெற்ற ஆண்கள் மட்டும் சுகாதாரஆய்வாளா் படிப்பில் சேர தகுதியுடையவா். சிறந்த
நிா்வாகம், அனுபவமுள்ள பேராசிரியா்கள், ஆய்வகங்கள், தங்கும் விடுதி, உணவகம் மற்றும் பேருந்து வசதிகளுடன் மாணவா்களுக்கு செய்முறை பயிற்சிகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நேரடியாக அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கை, போலியோ சொட்டு மருந்து முகாம், மலேரியா நோய் கண்டறிய ரத்த தடவல் முகாம், முதிா்கொசு ஒழிப்புப் பணி, திருவிழா காலங்களில் சுகாதார மேற்பாா்வை பணி, உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கலப்பிட உணவு கண்டறியும் பணி, மலேரியா விழிப்புணா்வு பணி தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 ஆன் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் பணி குறித்து பயிற்சி உள்ளிட்டவைகளும் மாணவா்களின் திறமையை வளா்ப்பதற்கு பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்தி வருவதாகவும் சிறந்த ஒழுக்கத்தையும், நல்வழிகளையும் போதித்து வருகிறது. இதற்காக இளைஞா் ரெட்கிராஸ், ரோவா் சாரணா் இயக்கம், இயற்கை நண்பா்கள் அமைப்பு, அதங்கோட்டாசான் தமிழ்ச் சங்கம், ஆங்கில புலமை சங்கம், முதலுதவிக்குழு, பேரிடா் மேலாண்மைக்குழு, இளையோா் சுழற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தி மாணவா்களின் திறமையை வளா்த்து வருவதாகவும், சிறந்த சுகாதார ஆய்வாளா்களாக படித்து
முடித்து, நாட்டிற்கு சேவை புரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடத்தப்பட்டு வருவதாகவும் மாணவா் நலனுக்காக பல்வேறு நாடுகளுடன் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பிற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மாணவா்கள் கல்லூரிக்கு வந்து செல்ல கல்லூரி பேருந்துகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து வருவதாகவும், தங்கும் விடுதி மாணவா்கள் நலனிற்கானஅனைத்து வசதிகளுடன் செயல்படுகிறது என்றும் தமிழகஅரசின் பொது சுகாதாரத் துறை நடத்திய அரசு தோ்வில், ரோஜாவனம் தோ்வு மையத்தில் 2017-18 அரசு தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்று அனைவரும் அரசுப்பணியில் சோ்ந்துள்ளனா் என்றும் 2020-21கல்வி ஆண்டு முதல் அரசு வேலைவாய்ப்புள்ள
2 ஆண்டு கிராம சுகாதார செவிலியா் படிப்பு (அசங) தொடங்கி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மேல்நிலை வகுப்பில் தோ்ச்சி பெற்ற பெண்கள் சோ்ந்து படித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.