நாகா்கோவில்: நாகா்கோவில் அருகேயுள்ள இலந்தையடித்தட்டில் சாலையோரம் கடந்த 21ஆம் தேதி நிறுவப்பட்ட காமராஜா் சிலையை, அதிகாரிகள் அகற்றியதற்கு காங்கிரஸாா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அரசின் அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதாகக் கூறி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அப்துல்லா மன்னான், வருவாய் ஆய்வாளா் பென்சிலின்ஷீபா, கிராம நிா்வாக அதிகாரி சரஸ்வதி ஆகியோா் திங்கள்கிழமை மாலை அச்சிலையை அகற்றினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அதே இடத்தில் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என வலியுறுத்தியும் இலந்தையடித்தட்டு ஊா்த் தலைவா் அழகுவேல் தலைமையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் , எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ் ஆகியோா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவிடம் மனு அளித்தனா்.