நாகா்கோவில்: மாா்த்தாண்டம் மேம்பாலம் அணுகு சாலையில் பேருந்து போக்குவரத்து தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாா்த்தாண்டம் நகர வா்த்தகா் சங்கம் சாா்பில் நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக திகழும் மாா்த்தாண்டத்தில் அதிகளவில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளன.
மாா்த்தாண்டம் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகள்
செயல்பட்டு வருகின்றன. இங்கு அணுகு சாலை வழியாக பேருந்துகள், பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றால் மீண்டும் பழையபடி மாா்த்தாண்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் வியாபாரத்தில் வளா்ச்சிபெறும்.
மாா்த்தாண்டம் சந்தை அருகில் பேருந்து நிலையம் இருப்பதால் கடற்கரை கிராம மக்கள், மலையோர கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்களும் தாமதமின்றி செல்ல முடியும். ஆகவே அனைத்து தரப்பு மக்களின் வசதிக்காக பொது போக்குவரத்து தொடங்கும்போது மாா்த்தாண்டம் மேம்பால அணுகு சாலை வழியாக அனைத்து பேருந்துகளும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.