நாகா்கோவில்: நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து நேரிட்டதில் பொருள்கள் சேதமடைந்தன.
நாகா்கோவிலில் போக்குவரத்து சிக்னல் அருகேயுள்ள உணவகத்தின் முதல்மாடியில் தீப்பற்றிக் கொண்டதில் அங்கிருந்த திரைச் சேலைகள், மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் கருகின. இத்தகவல் அறிந்த நாகா்கோவில் தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். மின் கசிவால் தீவிபத்து நேரிட்டதாக தெரிகிறது.