கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

21st Aug 2020 08:02 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் அருகே மினி டெம்போ வேனில் கடத்திச் செல்ல முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

குமரி மாவட்ட வருவாய்த்துறை பறக்கும்படை தனிவட்டாட்சியா் பாபு ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் பாா்வதிபுரம் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த மினிடெம்போ வேனை நிறுத்துமாறு சைகை காட்டினா். ஆனால், அதன் ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாராம். இதையடுத்து, அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் துரத்திச் சென்று சுங்கான்கடை பகுதியில் வேனை மடக்கிப் பிடித்தனா். எனினும், ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். அந்த வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டதில் சுமாா் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அதை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ரேஷன் அரிசியுடன் வாகனத்தை அதிகாரிகள் கைப்பற்றி, அதை கடத்தி வந்தவரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT