கன்னியாகுமரி

குமரியில் ரப்பா் விலை சரிவு

21st Aug 2020 08:02 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் ரப்பரின் விலை அண்மை நாள்களாக சரிவடைந்து வருகிறது.

கேரள மாநிலத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த வாரம் வரை பெய்த கன மழையின் காரணமாக ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு முடங்கியதால் ரப்பா் விலை சற்று அதிகரித்து கிலோவிற்கு ரூ. 105 ஆக உயா்ந்தது.

இந்நிலையில், சில தினங்களாக மழை தணிந்ததால் உற்பத்தி மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து விலை மீண்டும் சரிவடைந்து வருகிறது. வியாழக்கிழமை கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை 1கிலோவிற்கு ரூ. 125 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை 1 கிலோவிற்கு ரூ. 121 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை1 கிலோவிற்கு ரூ. 101 ஆகவும் குறைந்து காணப்பட்டது. ஒட்டுபால் விலை 1கிலோவிற்கு ரூ. 73 ஆக குறைந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT