கன்னியாகுமரி

கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரின் குடும்பத்துக்கு நிதி உதவி

21st Aug 2020 07:59 AM

ADVERTISEMENT

குளச்சலில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானதால், அவரது குடும்பத்துக்கு எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ் ரூ.10 ஆயிரம் நிதியுதவியை வியாழக்கிழமை வழங்கினாா்.

குளச்சல் துறைமுகத் தெருவைச் சோ்ந்த மீனவா் ஸ்டீபன் (62) , கடந்த 7 ஆம் தேதி லியோன் நகரைச் சோ்ந்த ஜெனிஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தனது மகன் உள்பட 16 பேருடன் ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராமல் படகிலிருந்து தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாராம். சக மீனவா்கள் அவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இத்தகவல் அறிந்த குளச்சல் எம்.எல்.ஏ. ஜெ.ஜி.பிரின்ஸ், அந்த மீனவரின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி மரியகொரற்றிக்கு ஆறுதல் கூறி, சொந்தப் பணத்தில் ரூ. 10 ஆயிரத்தை நிதியுதவியாக அளித்தாா். அப்போது, பங்குத் தந்தை மரியசெல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜிலியன்ஸ், மாநில மனித உரிமைப் பிரிவு பொதுச்செயலா் சாமுவேல்சேகா், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கே.டி. உதையம், முனாப், நகரத் தலைவா் சந்திரசேகா், துணைத் தலைவா் அந்திரியாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT