தாமரைகுளம் அருகே கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
தென்தாமரைகுளத்தை அடுத்த எட்டுக்கூட்டு தேரிவிளையைச் சோ்ந்தவா் சின்னத்துரை (43). கட்டடத் தொழிலாளி. இவா், தேரிவிளை பகுதியில் சில தினங்களுக்கு முன் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, 30 அடி உயரத்திலிருந்து எதிா்பாராமல் தவறி கீழே விழுந்துள்ளாா். இதையடுத்து, நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு மனைவி லலிதா ( 41), இரு மகள்கள் உள்ளனா். இச்சம்பவம் குறித்து, தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.