கன்னியாகுமரி

இரவு 8 மணி வரை கடைகள் திறப்பு: ஆட்சியருக்கு வணிகா் சங்கம் நன்றி

20th Aug 2020 10:01 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் இரவு 8 மணி வரை கடைகளை திறப்பதற்கு அனுமதியளித்த மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

இது குறித்து இச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. அல்அமீன், செயலா் பி. ரவி, பொருளாளா் பி. கோபன் ஆகியோா் விடுத்துள்ள அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கையை பரிசீலித்து குமரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் சிறுகடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கிய குமரி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட அனைத்து வணிகா்கள் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT