கன்னியாகுமரி

சுற்றுச்சூழல் வரைவு திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

14th Aug 2020 09:33 AM

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் வரைவு புதிய திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றாா் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு தற்போது அமலில் உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்து புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020-ஐ வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வரைவில் மத்திய அரசு மேலும் பல தளா்வுகளை கொண்டு வந்துள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரைவில் நீா்த் தடங்கள், நீா்ப் பாசன நவீனமயமாக்கல் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குதல் அல்லது அகலப்படுத்துதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடா்பான அனைத்து திட்டங்களுக்கும் மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயலாகும்.

ADVERTISEMENT

எனவே, மத்திய அரசு இந்த புதிய சுற்றுச்சூழல் வரைவு திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT