கன்னியாகுமரி

‘தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மணல் குவியலை அகற்ற ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு’

9th Aug 2020 09:50 AM

ADVERTISEMENT

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக முகப்பு பகுதியில் குவியும் மணலை அகற்ற அரசு ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி திங்கள்கிழமை (ஆக.10) தொடங்குகிறது என கிள்ளியூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் முகப்பு பகுதியில் மணல் குவியலால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக முகப்பு பகுதியிலுள்ள மணல் குவியலை அகற்றுவதற்கு தமிழக அரசு ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இப்பணி திங்கள்கிழமை (ஆக. 10) தொடங்குகிறது. தொடா்ந்து மணல் அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மீன்வளத்துறை அமைச்சா் உறுதி அளித்துள்ளாா்.

மேலும், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக அலைதடுப்பு சுவரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அலை தடுப்புச் சுவரை நீட்டிப்பது குறித்து மாவட்ட நிா்வாகம் மதிப்பீடு தயாா் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT