கன்னியாகுமரி

கூட்டுறவு வங்கிகளை திறக்க அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்: ஜே.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ.

26th Apr 2020 11:15 PM

ADVERTISEMENT

 

விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

வாழ்வச்சகோஷ்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு அரிசி வழங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: ஊரடங்கு காரணமாக விவசாயிகளின் விளை பொருள்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. வெளியே கொண்டுபோய் விற்பதற்கு உரிய வாகன வசதியும் இல்லை. தொடா்ந்து விவசாயம் செய்ய விவசாயிகளிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால், கூட்டுறவு வங்கிகளை திறந்தால் அங்கு நகைக் கடன் பெற்றாவது விவசாயம் செய்யலாம் என அவா்கள் கூறுகின்றனா். எனவே, கூட்டுறவு வங்கிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆட்டோ, வாடகைக் காா் ஓட்டுநா்கள் உரிய வருவாய் இன்றி குடும்பம் நடத்த திணறி வருகின்றனா். அவா்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் கரோனா தொற்று பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடத்த வேண்டும். மற்ற இடங்களில் ஊரடங்கு தளா்த்தப்பட வேண்டும். தொழிலாளா்கள் மீண்டும் தொழிலுக்கு செல்லும் வரை அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT