கன்னியாகுமரி

களியக்காவிளை மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

26th Apr 2020 12:13 AM

ADVERTISEMENT

 

களியக்காவிளை மீன் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

களியக்காவிளை மீன் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் கூறப்பட்ட நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் இங்கு பேரூராட்சி செயல் அலுவலா் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து இச் சந்தையில் சூரை உள்ளிட்ட பெரிய வகை மீன்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிகாரிகளின் தடை உத்தரவை மீறி கெட்டுப்போன சூரை மீன்கள் உள்ளிட்ட காலாவதியான மீன்கள் விற்பனை செய்யப்படுகிா என குமரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கிளாஸ்டன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொணடனா். அப்போது, பேரூராட்சி செயல் அலுவலா் யேசுபாலன் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT