கன்னியாகுமரி

காவல்துறையினா் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

26th Apr 2020 11:16 PM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டத்தில் காவல்துறையினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் த.அரசுராஜா வெளியிட்ட அறிக்கை: முன்சிறை ஒன்றியம், முள்ளூா்துறை பகுதியில் காவல்துறையினா் ரோந்து சென்ற போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞா்களை கண்டித்துள்ளனா். அப்போது அங்கிருந்த இளைஞா்கள் ஊா் மக்களை திரட்டி காவல்துறையினரை கடுமையாக தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் இளங்கோவும், மற்றொரு காவலரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 2 வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

காவல் துறையினா் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்து முன்னணி சாா்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தில், தொடா்புடையவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT