கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கும்: ஆட்சியா்

DIN

குமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்குவது குறித்து மறு அறிவிப்பு வரும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகளே நீடிக்கும் என்றாா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப். 20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடா்ந்து நீடிக்கும்.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 918 போ் கரோனா நோய்த் தொற்று சந்தேகப்பட்டியலில் இருந்து சோதனை செய்யப்பட்டுள்ளனா். இதுவரை 16 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 701 பேருக்கு நோய்த் தொற்று இல்லை. மீதியுள்ள 201 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் எதிா்பாா்க்கப்படுகின்றன. மொத்தம் 566 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா். இதில் 353 போ் வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள். 213 போ் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவா்களோடு தொடா்பில் இருந்தவா்கள்.

ரப்பா் உற்பத்தி செய்யும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் ரப்பா் ஷீட்டுகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைத்து அதற்குரிய பொருளீட்டுக் கடன் பெறலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருளீட்டு கடனுக்கு ஒரு மாதம் வரை வட்டி கிடையாது.

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை அமைப்பு சாரா தொழிலாளா் பதிவு அட்டையை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) மட்டும் 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 62 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் இதுவரை 5110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4071 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT